மூன்றுவயதில்
இழுத்துச்செல்லப்பட்டேன் பள்ளிக்கு
என் உலகம் சுருங்கிப்போனது
நான்கு சுவர்களுக்குள்
பதின்மூன்று வயதில்
பூப்படைந்தேன் உடல்ரீதியாக
நிலம் பார்த்து நடக்கச்சொன்னால்
அம்மா
கல்லூரிபருவம் முடிவதற்குள்
முடிந்தது கல்யாணம் அவசர அவசரமாக
எங்கள் கடமை முடிந்ததென்றனர்
பெற்றோர்
படித்து முடிப்பதற்குள்
பகல் பக்கத்தை திருப்பிக்கொண்டு இரவுப்பக்கத்தை
காட்டியது ஒரு நாள்
இப்படியே பலபக்கங்கள்
திருப்பிக்கொண்டன
குழந்தையும் கணவனையும் சேவிப்பதில்
படித்தேன்
செய்தித்தாளில் ஓர் செய்தி
“சாதனைக்கு எதுவும் தடையில்லை: கிளிஸ்டர்”
கிராண்ட்ஸ்லாம் போட்டியில்
வென்ற கோப்பையுடன் புகைப்படம்
கிளிஸ்டர் கையில் குழந்தை அருகில் கணவர்
நானும் யோசிக்க தொடங்கினேன்
2 comments:
good correlation with photo and real time life..the poem expresses today's home-maker life exactly...expecting more from you..update often..all the best..
மணிமகன்,
உங்கள் கருத்துக்கு நன்றி.
இதுபோன்ற நல்ல கவிதைகள் என் வலைப்பக்கத்தில் இனி தொடர்ந்து வெளிவரும். தொடர்ந்து எழுதவும் முடிவுசெய்துள்ளேன்.
Post a Comment