Sunday, January 10, 2010

33வது புத்தக காட்சி கிணற்றில் இறைத்து வந்த புத்தகங்கள்


பொங்கல் விழாவிற்கு ஊருக்கு போகும் போது வழியில் இரண்டு நாள் சென்னையில் தங்கி புத்தக காட்சிக்கு செல்ல முடிவு செய்திருந்தேன். அது போலவே கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஹைதராபாத் காச்சிகுடா எக்ஸ்ப்ரஸ்சில் சொந்த விசயமாக சென்னை வருவதாக சொன்ன அலுவலக நண்பரும் நானும் ஏறிக்கொண்டோம். ரயில் பயணம் மாலை 4 மணிக்கு தொடங்கியது. அவர் புத்தகங்கள் படிப்பதில் ஆர்வமில்லாதவர் ஆனால் நான் புத்தகங்கள் படிப்பது ஏதோ எழுதுவேனென்று அவருக்கு தெரியும். நான் எவ்வளவோ மறுத்தும் நாம் எழுதிய கதைகளை சொல்லச்சொல்லி கேட்டார். அருகில் யாரும் தமிழ் பேசுபவர்கள் இருக்கிறார்களா என்று பார்த்துவிட்டு நானும் சொல்லத்துடங்கினேன். என் சிறுகதையில் தொடங்கிய எங்கள் உரையாடல் சுஜாதாவின் ‘ஆ’, s.ramakrishnan ன் ‘பனாரஸ்’ என்று நீண்டு கொண்டே சென்றது. அவரும் அவர் அம்மா சொன்னகதைகளை சொன்னார். இரவு 10 மணி வரை எங்கள் உரையாடல் தொடர்ந்தது.
                     
அடுத்த நாள் காலை (நேற்று) நல்ல மனது கொண்ட ஆட்டோ காரனின் பேச்சைக்கேட்டு சென்னை எக்மோரிலிருந்து சைதாப்பேட்டை செல்லும் 23C பஸ்சில் ஏறுவதற்கு பதிலாக opposite directionல் செல்லும் 23C பஸ்சில் ஏறி அதன் பின் சற்று தூரத்தில் இறங்கி மீண்டும் எக்மோர் வந்து  சைதாப்பேட்டை செல்லும் 23C பஸ்சில் ஏறினோம். கூட வந்த நண்பர் சொன்னார் ”சென்னை ஆட்டோகாரங்களை மட்டும் நம்பவே கூடாது, திருட்டுபயக”              

நேற்று மதியம் 3 மணி வாக்கில் புத்தக காட்சிக்கு சென்றிருந்தேன். பட்டியலிட்டிருந்த வாங்க வேண்டிய புத்தகங்களை ஒவ்வொன்றாக வாங்கிக்கொண்டிருந்தேன். நிலாரசிகனை சந்தித்து இரண்டு நிமிடங்கள் பேசினேன். உயிர்மையில் புத்தகங்கள் வாங்கிக்கொண்டிருந்த போது மனுஸ்யபுத்திரன் சிலருடன் பேசிக்கொண்டிருந்தார். ராமகிருஸ்ணன் வருவார் என்று காத்திருந்து பார்த்தேன் வரவில்லை. இதே போலவே இரண்டாவது நாளும் சென்றது.

புத்தக காட்சி கிணற்றில் நான் இறைத்து வந்த புத்தகங்கள்

  1. இமையம் – நாவல் – ஆறுமுகம்
-          கோவேறு கழுதைகள்
-          செடல்
  1. இமையம் – சிறுகதை தொகுப்பு – வீடியோ மாரியம்மன்
  2. கி.ராஜநாராயணன் – சிறுகதை தொகுப்பு - தாத்தா சொன்ன கதைகள்
  3. நாஞ்சில் நாடன் – சிறுகதை தொகுப்பு – சூடிய பூ சூடற்க
  4. வண்ணதாசன் – சிறுகதை தொகுப்பு – கிருஸ்ணன் வைத்த வீடு
-          சின்னுமுதல் சின்னுவரை
  1. பாவண்ணன் – சிறுகதை தொகுப்பு –இரண்டு மரங்கள்
  2. விக்ரமாதித்யன் – சிறுகதை தொகுப்பு –  அவன் அவள்
  3. வண்ணநிலவன் – நாவல் – கடல் புரத்தில்
- கம்பாநதி
     9. ராமகிருஸ்ணன் – குருங்கதை – நகுலன் வீட்டில் யாருமில்லை
    10. சாருநிவேதிதா  – சிறுகதை தொகுப்பு - மதுமிதா சொன்ன பாம்பு கதைகள்
    11. ஜெயமோகன் - குறுநாவல் – அனல் காற்று  
    12. ஜே. மாதவராஜ் – வலையுலகில் வெளியான சிறுகதைகளின் தொகுப்பு – மரப்பாச்சியின் சில ஆடைகள்
    13. சந்திரன் – அறிவியல் புனைகதை தொகுப்பு – சுஜாதா நினைவுப்புனைவு 2009
    14. நிலாரசிகன் – சிறுகதை தொகுப்பு – யாரோ ஒருத்தியின் டையிரிக்குறிப்புகள்

இதை தவிர என் அண்ணன் மகளுக்காக Nursury Rhymes, மலரும் மலர் போன்ற குழந்தைகள் பாடல் புத்தகளும் வாங்கினேன்.

ஒவ்வொரு நூலாக படித்து நூல்கள் ஏற்படுத்தும் உண்ர்வுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

No comments:

பார்வைகள்